சென்னை: சென்னை, சத்யமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்
பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'இது,
ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. ஓட்டு சீட்டுக்கள் மூலம் ஆட்சி மாற்றத்தை
ஏற்படுத்தலாம் என்பதில் உலகத்திற்கு இந்தியா இதன் மூலம் எடுத்துக்காட்டாக
உள்ளது. வெற்றி பெற்றுள்ள பா.ஜ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் எங்கள்
வாழ்த்துக்கள். மக்களின் தீர்ப்பை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்
கொள்கிறோம். எங்களின் தோல்வி குறித்து ஆய்வு செய்ய வேண்டும்,' என்றார். :DM

No comments:
Post a Comment