சிறிலங்காவுக்கு வருமாறு இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர
மோடிக்கு சிறிலங்கா அதிபர் விடுத்துள்ள அழைப்பை அவர் ஏற்றுக்
கொண்டுள்ளதாக, சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல
தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதும், அவருக்குத் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்புக்கு மோடியிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது.
புதிய இந்தியத் தலைவர் சிறிலங்காவுக்கு விரைவில் வருவார் என்று நம்புகிறோம்.
இந்த நேரத்தில் சிறிலங்கா அதிபர் சீனாவுக்கு சென்றுள்ளது குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தப் பயணம் முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment