Monday, May 19, 2014

நரேந்திர மோடியை வைகோ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

புதுடெல்லி,
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாட்டின் அடுத்த பிரதமர் ஆக உள்ளார். இந்நிலையில் இன்று பாரதீய ஜனதா வெற்றி பெற்றதற்கு அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கை, கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் குஜராத் பவனில் நரேந்திர மோடியையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


No comments:

Post a Comment