Monday, May 19, 2014

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை போரில் குடிபெயர்ந்த தமிழர்களை மீண்டும் பழைய இடத்திலேயே குடியமர்த்த வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் கூறினார்

ஐந்தாமாண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, தஞ்சாவூர் விளாரிலுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர்.இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை போரில் குடிபெயர்ந்த தமிழர்களை மீண்டும் பழைய இடத்திலேயே குடியமர்த்த வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் கூறினார்.
தஞ்சாவூர் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில், முள்ளிவாய்க்கால் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. முற்றத்தில் உள்ள விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் அஸ்திக்கு அனைவரும் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறியது:

2009-ஆம் ஆண்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளை முள்ளிவாய்க்கால் நினைவு தினமாக அனுசரித்து வருகிறோம். இந்நாளில், இலங்கைத் தமிழர்கள் படுகொலைக்கு காரணமாக இருந்தவர்களை பொது விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும்.
அங்கு வாழ்ந்த இலங்கைத் தமிழர்கள் தங்களின் இடத்தைவிட்டு விரட்டியடிக்கப்பட்டனர். அவ்வாறு குடிபெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்கள் இடத்திலேயே குடியமர்த்த வேண்டும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் அளிக்கும் தீர்ப்பை உலக சமுதாயம் முடுக்கிவிட வேண்டும் என்றார் நெடுமாறன்

No comments:

Post a Comment