சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் வலுவான உறவுகளை தாம்
எதிர்பார்ப்பதாக, இந்தியப் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி
தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில், நரேந்திரமோடியுடன் தாம் நேற்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த்து குறித்தும் அவரை சிறிலங்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தது குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நரேந்திர மோடி டுவிட்டரில் பதிலளிக்கையில், “இன்று காலை உங்களுடன் பேசியது அருமையாக இருந்தது.
நான் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் வலுவான உறவுகளை எதிர்பார்த்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment