இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் சிறிலங்காவுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, லஷ்கர் - ஈ - தய்பா அமைப்பினர் இந்தியாவுக்குள் நுழைவதற்கான தளமாக சிறிலங்காவைப் பயன்படுத்துவதாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் எச்சரித்திருந்தன.
ஆனால் அதை சிறிலங்கா அரசாங்கம் முற்றாக நிராகரித்திருந்தது.
இப்போது அமெரிக்கா மீண்டும் அதுபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்தியாவில் முக்கியமான தாக்குதல்களை நடத்தும் நோக்கில் சுமார் 200 பேர் சிறிலங்காவில் காத்திருக்கின்றனர். அவர்களில் திட்டமிடுபவர்களும் வசதிகளை செய்து கொடுப்பவர்களும் அடங்கியுள்ளதாக சந்திக்கப்படுகிறது என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அதேவேளை, இந்தியாவுக்குள் நுழைவதற்காக சிறிலங்காவில் 200 லஷ்கர் – ஈ - தய்பா அமைப்பினர் காத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்காவிடம் இருந்து ஏதேனும் அறிக்கை அனுப்பப்பட்டதா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
முன்னதாக அதுபற்றி வெளியான செய்திகளுக்கு பாதுகாப்புச் செயலர் பதிலளித்து விட்டார் என்றும் அப்படியான முகாம்கள் ஏதும் இங்கு இல்லை என்று கூறியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயற்படும் லஷ்கர் - ஈ - தய்பா அமைப்பு தெற்காசியாவில் உள்ள மிகப்பெரிய இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment