உலகிலேயே மிக அதிகமான சட்டவிரோதச் சிறைச்சாலைகள் உள்ள நாடு இலங்கை என ஜனநாயகத்திற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது. இந்தச் சட்டவிரோதச் சிறைகளில் 8000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அமைப்பின் உறுப்பினர் பேராசிரியர் குமார் டேவிட் தெரிவித்துள்ளார்.கொழூம்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநட்டில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். சர்வதேச ஜூரிகள் ஆணைக்குவை மேற்கோள்காட்டி அவர் இந்தத் தகவலைக் கூறினார்.
“தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நன்கு அறியப்பட்டவர். அதேசமயத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும் பிடியாணை எதுவும் இல்லாமலும் வேறு எந்த சட்ட ரீதியான நடவடிக்கைகள் இல்லாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்றார் அவர்.
No comments:
Post a Comment