நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் வழங்கும் வாக்குமூலங்கள் அதிகாரிகளைச் சங்கடத்தில் ஆழ்த்தும் வகையில் இருந்ததாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. இதுபற்றி பி.பி.சி மேலும் தெரிவித்துள்ளதாவது, போரினால் ஏற்பட்ட துயரங்களுக்காக சிறிலங்கா அரசாங்கம் நாட்டு மக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டுமென முன்னணி வர்த்தகர் ஒருவர் அழைப்பு விடுத்திருக்கிறார். போரின் இறுதிக் கட்டத்தில் நடந்தது என்ன என்பதைக் கண்டறிவதற்காக அரசாங்கம் அமைத்திருக்கும் ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்தபோது இவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்திருக்கிறார். போரின் இறுதி நாட்களில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களின் விளைவாக பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் இந்த ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் அரசாங்கமோ சிறிலங்காவில் போர் மூண்டமைக்கான முழுப்பொறுப்பையும் தோற்கடிக்கப்பட்டுவிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதே சுமத்துகிறது.
தற்போது இந்த ஆணைக்குழுவானது வடக்கில் தொடர்புடைய மக்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றுவருகிறது. இதன்போது அரச அதிகாரிகளைச் சங்கடத்தில் ஆழ்த்தும் வாக்குமூலங்களையும் மக்கள் வழங்கி வருகிறார்கள்.
அகதிகள் மீதான எறிகணைத் தாக்குதல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வென்றதையிட்டு கடந்த வருடமும் இந்த வருடமும் வெற்றி விழாக்களை ஒழுங்கு செய்தமைக்குப் பதிலாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈட்டினை வழங்குவதற்காக அந்தப் பணத்தினை அரசாங்கம் பயன்படுத்தியிருக்கலாம் என சிறிலங்கா வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்தின கூறுகிறார்.
”சிறிலங்காவில் கடந்த காலத்தில் ஆட்சியிருந்த ஆட்சியாளர்கள், குறிப்பாக போர்க் குற்றங்களிலும் ஈடுபட்ட அரசியல் தலைவர்களின் சார்பாக குறிப்பாகப் போரினால் பாதிக்கப்பட்டவர்களிடமும் ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் மன்னிப்பினைக் கோருவதற்கு உங்களது இந்தச் செயற்பாடு வழிசெய்யும் என நான் நம்புகிறேன்” என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் உண்மை அறியும் ஆணைக்குழுவின் முன்னால் தனது கருத்தினைத் தெரிவத்த சந்திர ஜெயரத்தின கூறுகிறார்.
”அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களால் நீண்டபல ஆண்டுகளுக்குப் பின்னர் இதுபோன்ற பொதுமன்னிப்பினைக் கோர முடிகிறதெனில் ஏன் எங்களது நாட்டிலுள்ள ஆட்சியாளர்களால் முடியாது” என்றார் அவர்.
வடக்கில் நிலவுகின்ற நிலைமைகளில் மிக மோசமானதாக மக்கள் கருதும் சில அம்சங்களை ஜெயுயரத்தின பட்டியலிட்டார். காணாமற்போதல்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கைதுகள் வடக்கில் இன்னமும் தொடர்கின்றன என்றார் அவர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாகவும் ஆணைக்குழு தனது கவனத்தைச் செலுத்துவதோடு பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
”நாங்கள் பொதுமக்கள்தான் என உரக்கக் கத்தியபோதும் கடற்படையினர் நாங்கள் தப்பிவந்த படகினை இலக்குவைத்துத் தொடரான தாக்குதல்களை மேற்கொண்டனர்”
என விடுதலைப் புலிகளின் இறுதிக் கோட்டையாக விளங்கிய முல்லைத்தீவுப் பகுதியில் இடம்பெற்ற ஆணைக்குழுவினது பொது அமர்வில் கலந்துகொண்டு வாக்குமூலம் வழங்கிய தமிழர் ஒருவர் கூறினார். இதன்போது எட்டுப்பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
தாங்கள் இடம்பெயர்ந்துகொண்டிருந்தபோது நிகழ்ந்த எறிகணைத் தாக்குதலின் விளைவாக தனது மகளும் மருமகனும் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை பெண்ணெருவர் விளக்கினார்.
போர் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து தங்களை வெளியேறவிடாமல் புலிகள் தடுத்ததையும் இந்தச் சாட்சிகள் தங்களது வாக்கு மூலத்தில்
No comments:
Post a Comment