Wednesday, October 13, 2010

யேர்மனியில் மலரப்போகும் ஈழத்தமிழர் அவையை வாழ்த்துகின்றோம்.-யேர்மன் தமிழ் எழுத்தாளர்

யேர்மனியில் மலரப்போகும் ஈழத்தமிழர் அவையை வாழ்த்துகின்றோம்.-யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம். ஈழம்5 .இணையத்தளம்

இன்று அகில உலகியே மிகமிகக் கொடுரமான,மிகமிக அருவருக்கத்தக்க முறையில், அரக்கத்தனமான கொலைகளையும், கற்பழிப்புகளையும்,மண் பறிப்புகளையும்,மனித உரிமை மீறல்களையும் தமிழீழத்தில் நடாத்துகின்ற சிங்கள அரசினதும்,அதற்கு முண்டு கொடுக்கும் சக்திகளினதும் கபட நாடகத்தை உலகின் முன் தோலுரித்துக் காட்டவேண்டிய கட்டாயத்தில் ஈழத்தமிழர் நாம் தள்ளப்பட்டு உள்ளோம்.

போராட்ட வடிவங்கள் மாறலாம்,போராட்டம் மாறாது. எனும் தேசியத் தலைவரின் வேத வாக்கிற்கிணங்க, சிங்களத்தின் கொடுமைகளிலிருந்து மீழ்வதற்காக,அதன் கொடுமைகளை உலகிற்கு எடுத்துக்கூற, அதன் முகமூடியைக் கிழித்தெறிய புலம் பெயர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட போர்உபாயங்களில் ஒன்றுதான் ஈழத்தமிழர் அவை.

அப்படியானதோர் ஈழத்தமிழர் அவையை யேர்மன் மண்ணில் அமைப்பதற்கான புனிதப் பணியை ஆரம்பிப்பதற்கான ஒன்றுகூடல் 10.10.2010 அன்று எசன் நகரில் நடைபெற்று, மேலும் ஓர்உறுதியான தாயகம்,தேசியம்,சுயநிர்ணயம்கொண்ட தமிழீழத் தனியரசு என்ற வேள்வித் தீயினை கொழுந்துவிட்டு எரியக்கூடியவகையில் , சனநாயக முறையில், ஓர் ஈழத்தமிழர் அவையை அமைப்பதற்கான ஏழுபேர் கொண்ட ஓர் குழுவைத் தெரிவுசெய்ததையிட்டு பெருமகழ்வு கொள்கின்றோம்.

அமையப்போகும் ஈழத்தமிழர்அவை யேர்மன் மண்ணிலுள்ள அனைத்து ஈழத்தமிழ் மக்களையும் உள்வாங்கி ஒருங்கிணைத்து, அவர்களின் உறுதுணையோடு, முட்கம்பி முகாமிலிருந்து மீழ்குடியேறும் எம்மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் என்பது நிட்சயம். மேலும் யேர்மன்வாழ் இளம் சமுதாயம் முழு நம்பிக்கையோடு இந்த ஈழத்தமிழர் அவையில் பங்குகொண்டு தங்கள் அதியுயர்ந்த சேவையை வழங்கி, எங்கள் தமிழீழம் மலரப் பாடுபடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

தமிழீழமண்ணை மீட்பதற்காக போர்க்களத்திலே தம்மைப் பலியாக்கிக்கொண்ட மாவீரர்களினதும், எதிரிகளை அழிப்பதற்காக தம்மையே தகர்த்துக்கொண்ட கரும்புலிகளினதும் தியாகங்களை எங்கள் இதயத்தில் இருத்தி, அவர்கள் சிந்திய இரத்தத்திற்கு மதிப்பளித்து, மாவீரர் கனவை நினைவாக்குவதே தமிழ் மக்களாகிய எம் ஒவ்வொருவரின் கடமையென உறுதியெடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து ஈழத்தமிழர் அவைக்குப் பலம்சேர்ப்போம், விடுதலைத் தேரின் வடம் பிடிப்போம்.

யேர்மன் திருமலைச்செல்வன்.
யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்.

ஈழம் 5.இணையத்தளம்

No comments:

Post a Comment