வடமராட்சி கிழக்கு பகுயில் அண்மையில் மீளக் குடியமர்ந்த குடும்பமொன்றின் வீட்டுகளுக்குள்ளே புகுந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட இராணுவச்சிப்பாய்களில் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து நைய புடைத்து எடுத்தனர் .இன்று அதிகாலை 1 மணியளவில் இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மிக அண்மையில் வடமராட்சி கிழக்கில் மீளக்குடியமர்ந்த வீடுகளில் ஆண்கள் கடற்றொழிலுக்கு செல்லும் சமயம் பார்த்து படைச்சிப்பாய்கள் அப்பகுயில் உள்ள வீடுகளுக்குள்ளே புகுந்து அங்குள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளனர்.
இதன்போது பெண்ணெருவர் கூக்குரலிட்டபோது அருகிலுள்ளவர்கள் வந்து இராணுவச்சிப்பாய் ஒருவரை மடக்கிப்பிடித்து நைய புடைத்து எடுத்தனர் அதன் பின்னர் குறித்த இராணுவச் சிப்பாயை கட்டிவைத்து அடித்தனர் பின்னர் விடிந்ததும் மருதங்கேணி உதவி அரசாங்க பணிமனை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி இராணுவக்கட்டயையிடும் அதிகாரி ஆகியவர்களை அழைத்து குறித்த இராணுவச்சிப்பாயை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பில் அங்கு வந்த இராணுவக்கட்டளையிடும் அதிகாரி மக்களுக்கு முன்னரே குறித்த இராணுவச்சிப்பாயை அடித்ததோடு இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது என உறுதியளித்ததாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் அங்குள்ள மக்களின் வீட்டுப்பகுதிகளுக்குள் கடந்த 3 நாட்களாக இரவில் இராணுவத்தினர் நடமாடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment