நட்புறவைப் பேணும் வகையில் இந்தியா இலங்கைக்கு இராணுவத் தளபாடங்கள், ஏவுகணைகள் மற்றும் ராடர் கருவிகளை அன்பளிப்பாக வழங்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று தகவல் வெளியிட்டுள்ளன.
இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமாரின் இலங்கை விஜயத்தின் போதே இவை கையளிக்கப்படவுள்ளன.
இன்று வருகை தரவிருந்த பிரதீப் குமாரின் விஜயம் தற்போது திங்கட்கிழமையாக மாற்றப்பட்டுள்ள நிலையிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட இராணுவத் தளபாடங்களின் தொடர்ச்சியாகவே இவைகளும் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தினருக்குத் தேவையான இராணுவத் தளபாடங்கள், நிலப்பரப்பைத் தளமாகக் கொண்டு செற்படக் கூடிய ராடர்கள், நிலத்திலிருந்து ஏவக் கூடிய அதிசக்தி வாய்ந்த ஏவுகணைகள் என்பனவே புதிதாக வழங்கப்படவுள்ளன.
யுத்த காலத்தின் போது கடல் மார்க்கக் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் மற்றும் தாக்குதல்களுக்காகவும் வழங்கியிருந்த அனைத்துக் கடற்படைப் படகுகளையும் இலங்கை அரசுக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கியிருந்தமையையும் இந்திய ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
No comments:
Post a Comment