Friday, December 24, 2010

போரில் தகப்பனை இழந்த ஆறு வயதுப் பாலகி மீது பாலியல் வல்லுறவு: வடமராட்சி கிழக்கில் சம்பவம்


வன்னிப் போரின் போது தகப்பனை இழந்த ஆறு வயதுப் பச்சிளம் பாலகியொருவர் யாழ்ப்பாணத்தில் காமாந்தகன் ஒருவனால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் மருதங்கேணிப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

45 வயதான காமாந்தகன் ஒருவனாலேயே சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த பாலகியின் தகப்பன் வன்னி யுத்தத்தில் இறந்து போய் விட்டதால் சிறுமி தாயாருடன் வசித்து வருகிறார். சம்பவ தினத்தன்று அச் சிறுமியின் தாயார் கடற்கரைக்கு சென்றுள்ளார். இதனை சாதகமாகப் பயன்படுத்தி சந்தேக நபர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியும் தாயாரும் பளைப் பொலிஸிடம் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் தொடர்நது புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment