தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தேடும் முயற்சியில் வெளிநாட்டில் உள்ள அந்த இயக்கத்தின் முன்னணி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன எனக் கவலை வெளியிட்டுள்ள இலங்கை, அதனை இந்தியாவிற்கும் தெரியப்படுத்தியுள்ளது.
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ் உடனான சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் சில தமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அரசு இது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
இந்திய அரசுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளோம். இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ் உடனான சந்திப்பின்போது எமது இந்தக் கவலையைத் தெரிவித்தோம்.
இலங்கை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்கும். இறைமையைக் காப்பாற்றுவதற்காக பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுப்போம்.
நிருபமா ராவ் உடனான சந்திப்பின் போது, பயங்கரவாதம் குறித்தும் சர்வதேச ரீதியிலான விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் குறித்தும் நாங்கள் கொண்டுள்ள கவலையை அவருக்குத் தெரியப்படுத்தினோம். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment