| [ சனிக்கிழமை, 08 சனவரி 2011, 12:59.33 PM GMT +05:30 ] | |
பிரிட்டனில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய சிவராஜா சுகந்தன் என்பவரே தற்போது நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளார். இவர் 1999 ம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் பிரிட்டனுக்குச் சென்றார். 2003 ஆம் ஆண்டு அவரின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு அவரின் மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்டது. தற்போது தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள சுகந்தனுக்கு பிணை வழங்குவது தொடர்பான விசாரணை முறையாக நடைபெறவில்லை என அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். பிரித்தானிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு முன்வைத்த வாதங்களின் பிரதி சுகந்தனுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவருக்கு சட்டத்தரணியொருவர் வழங்கப்படவில்லை எனவும் அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிவராஜா சுகந்தனின் விடுதலையை வலியுறுத்தி 800 பேர் கையெழுத்திட்ட மகஜர் ஒன்று பிரிஸ்டல் மேற்கு தொகுதி லிபரல் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வில்லியமிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டீபன் வில்லியம் எம்.பி. கூறுகையில், இவ்விடயம் குறித்து ஏற்கெனவே குடிவரவு அமைச்சர் டேமியன் கிறீனின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் மீண்டும் தான் அதை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சுகந்தன் பிரிட்டனில் இரு பிள்ளைகளைக் கொண்டிருப்பதும், அவர் குறிப்பிடத்தக்க காலம் அங்கு தங்கியிருப்பதும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வில்லியம் தெரிவித்துள்ளார். | |
|
Sunday, January 09, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment