| [ ஞாயிற்றுக்கிழமை, 09 சனவரி 2011, 03:41.19 PM GMT +05:30 ] | ||
| அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறீலங்காவின் வடகிழக்கு கடற்பகுதியில் பயணித்த விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றை சிறீலங்கா கடற்படையினர் தாக்க முனைந்த சமயம், விடுதலைப்புலிகளுக்கு சரியான சமயத்தில் தகவல்களை கொடுத்து போர்நிறுத்த கண்காணிப்புக்குழு காப்பாற்றியதாக 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் நாள் அனுப்பப்பட்ட அமெரிக்க தூதரகத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரணதுங்க, போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவரான நோர்வேயின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ரைகேவ் ரெலிப்சென் என்பவரை நீக்கவேண்டும் என கடிதம் அனுப்பியிருந்தார். விடுதலைப்புலிகளின் கப்பலை சிறீலங்கா கடற்படையினர் கண்டறிவதை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தடுத்துள்ளது. அதற்கு ரெலிப்சென் தான் முக்கிய காரணம். அவர் தொலைபேசி மூலம் விடுதலைப்புலிகளுக்கு தகவல்களை வழங்கியிருந்தார். அதனை தொடர்ந்து விடுதலைப்புலிகளின் கப்பல் தப்பிச்சென்றுவிட்டது என சந்திரிகா நோர்வேக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அக்டோபர் 16 ஆம் நாள் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் கண்காணிப்புக்குழுவின் தலைவர் ரெலிப்சென் உடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது, விடுதலைப்புலிகளின் கப்பல் ஒன்று வடகிழக்கு கடலில் பயணிக்கின்றதா என தாம் தவறுதலாக விடுதலைப்புலிகளிடம் தொலைபேசி மூலம் கேட்டுவிட்டதாக ரெலிப்சென் தெரிவித்திருந்தார். எனினும் ரெலிப்செனின் நடவடிக்கைகளில் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும், அவரை நீக்கும்படியும் சந்திரிகா வலியுறுத்தியிருந்தார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. | ||
|
Monday, January 10, 2011
விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பலை காப்பாற்றிய கண்காணிப்புக்குழு - விக்கிலீக்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment