Monday, January 03, 2011

கையும் மெய்யுமாகப் பிடிபட்ட கள்வனைப் பொலிசாரிடம் ஒப்படைக்க அவரைக் கொலைசெய்துள்ளது இலங்கைப் பொலிசார்.

கையும் மெய்யுமாகப் பிடிபட்ட கள்வனைப் பொலிசாரிடம் ஒப்படைக்க அவரைக் கொலைசெய்துள்ளது இலங்கைப் பொலிசார். (வீடியோ இணைப்பு)


கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி வரக்காப்பொல அங்குருவெல்ல பிரதேசத்தில் நகை அடகுபிடிக்கும் நிலையம் ஒன்றில் கொள்ளையிடச் சென்ற 7 கொள்ளையர்கள் இரண்டு காவற்துறையினரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

வீடியோ காட்சியில் உள்ளபடி, காவற்துறையினரின் கொலைக்கு பின்னர், வரக்காப்பொல- கொஸ் கெலேவத்தை பிரதேசத்திற்கு தப்பிச் சென்ற கொள்ளையர் ஒருவர் மறைத்திருந்த நிலையில், பொதுமக்களால் பிடிக்கப்பட்டு காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் ஏனைய கொள்ளையர்கள் மறைத்திருந்த இடம் தொடர்பான தகவல்களையும் பொதுமக்கள் காவற்துறையினருக்கு வழங்கியுள்ளனர். எனினும் காட்டுக்குள் மறைந்திருந்த கொள்ளையருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் கொள்ளையர்கள் 7 பேரும் கொல்லப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்திருந்தனர். எனினும் பொதுமக்கள் கொள்ளையர் ஒருவரை பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாக காவற்துறையினர் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், குறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளமை பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டமை பாரிய மனித உரிமை மீறல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment