Sunday, January 02, 2011

விக்கி லீக்ஸ் கசிவு: கோதுமை மா கொடுத்து கோபம் தணிப்பு

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது தலைமைச்செயலகத்துக்கு அனுப்பிய செய்திகளை, சிலவற்றை விக்கி லீக்ஸ் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


ரொபேட் ஓ பிளேக் இலங்கைத் தூதராக இருந்த காலகட்டத்தில் அவர் மகிந்தவையும் இலங்கை அரசையும் கடுமையாக விமர்சித்து அனுப்பிய செய்திகள் வெளியானதால், இலங்கை அரசு இதுகுறித்து தமக்கு விளக்கம் தரவேண்டும் என்று கேட்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.

அதனால் இருநாடுகளுக்கும் இடையே தோன்றிய நெருக்கடியை அமெரிக்கா சமாளிக்க முனைகிறது போலத் தேன்றுகிறது.

சமீபத்தில் பெய்த பெருமழை காரணமாக நாட்டின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, இதனைச் சாட்டாகப் பயன்படுத்தி நேற்றைய தினம் அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூட்டின் சுமார் 5.5 மில்லியன் அமெரிக்க லாடர் பெறுமதியான கோதுமை மாவை, உலக உணவுத்திட்டமூடாக பசிலிடம் வழங்கியுள்ளார்.

அதாவது கோபத்தைத் தணிக்க கோதுமை மா கொடுக்கப்பட்டுள்ளது. பெயரளவில் உலக உணவுத் திட்ட அதிகாரி ஒருவரையும் பூட்டின் அழைத்துச் சென்றுள்ளார்.

அனால் அவர் கைகளைக் கட்டியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தபடி நின்றுவிட்டுத் திரும்பியதாக விடையம் அறிந்த வட்டாரங்கள் செய்திவெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment