சொல்வதை செய்யும், செய்வதை சொல்லும் என்பதற்கு அமைய நேற்று நாம் எம் தமிழ் மக்களிற்கு குறுகிய நேரத்தில் விடுத்த வேண்டு கோளிற்கு அமைய இன்று இரவு 7.00 மணி போல் பேரூந்துக்களில் எம் மக்கள்
நிறைந்த நிலையில் Toronto வில் இருந்து அமெரிக்க வெள்ளை மாளிகை நோக்கி புறப்பட்டுள்ளனர். எம் மக்கள் 20 அடி நீளமும் 4 அடி அகலமும் தாங்கிய பதாகையுடன்”” “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்று ஓங்கி ஒலித்த குரலோடு புறப்படுள்ளனர்.
அப் பதாகையில், தமிழீழம் ஓவியமாக தீட்டப்பட்டுள்ள ஈழத்தினுள் கார்த்திகை மலர் கண் கொள்ளாத நிலையில் மலரும் காட்சி ஒருபுறம் அமைய, எம் தேசியக் கொடியில் ஒளி படைத்த கண்ணோடு பாயும் புலியின் சின்னத்தையும் தாங்கிய பதாகையை மக்கள் கை ஏந்தி நிற்கின்றனர்.
மக்களை கொல்லும் கொடியவன் ராஐபக்சாவின் கொடுங்கோள் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உத்வேகத்துடன் மக்கள் புறப்படுள்ளனர். இந் நிகழ்ச்சி வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைவது உறுதி.
....எங்கள் தாகம் தமிழீழ தாயகம்....
மின்னஞ்சல் : tehmc2011@gmail.com
No comments:
Post a Comment