
சோமாலிய கடல் கொள்ளையர்களின் செயல்பாட்டை கண்டும்
காணாதவர்கள் மாதிரி இலங்கைக் கடல் படையினர் நடந்து கொள்கின்றனர் என்று இச்செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
சோமாலிய கடல் கொள்ளையர்களுக்கும் இலங்கைக் கடல் படையினருக்கும் இடையில் ஏதோ ஒரு இரகசிய உடன்படிக்கை உண்டு என்றும் இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சோமாலிய கடல் கொள்ளையர்கள் கப்பல்களுக்கு தேவையான எரிபொருள்களை நிரப்புகின்றமைக்கும், கப்பல்களை தரித்து நிறுத்தி வைக்கின்றமைக்கும் ஆன வசதிகளை இலங்கைக் கடல் படையினர் செய்து கொடுத்து உள்ளார்கள் என்றும் இக்கடல் கொள்ளையர்கள் எவ்வித முட்டுக்கட்டைகளும் இல்லாமல் இந்துமா சமுத்திரத்தை பயன்படுத்துகின்றமைக்கான ஏற்பாடுகளை ஒழுங்கு பண்ணிக் கொடுத்துள்ளார்கள் என்றும் இச்செய்தி அடித்துச் சொல்கின்றது.
அண்மையில் சோமாலிய கடல் கொள்ளைக்காரர்கள் சிலர் இந்திய கடல் படையினரால் கைது செய்யப்பட்டனர் என்றும் இக்கடல் கொள்ளையர்களாலேயே இந்த அதிர்ச்சியூட்டும் வுண்மைகள் வெளி வரத் தொடங்கி உள்ளன என்று செய்தி தொடர்கின்றது.
No comments:
Post a Comment