
தமிழ் தேசியத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர் வீரப்பனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் .ஈழத்தில் நடந்த கடைசி கட்ட போரில் படுகாயமடைந்த மக்களுக்கு உதவ, மருந்து பொருட்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். .பிறகு பிணையில் வெளி வந்த முத்து குமார் நாம் தமிழர் கட்சி உள் கட்டமைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுகோட்டை அண்ணா சிலை அருகே இரு சக்கர வாகனத்தில வந்த இவரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. சீமான் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படுகொலை அரசியல் வட்டாரத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
No comments:
Post a Comment