
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது, மாகாணசபை உறுப்பினராக பதவி வகித்து வரும் இவர் மாகாணசபைக்குள் மேற்கொள்ளப்படும் வேலை இடமாற்றங்களில் தலையிட்டு வருவதுடன் தனக்கு வேண்டியவர்களிடம் பணத்தை வாங்கிவிட்டு இடமாற்றம் செய்து தருவதாகக் கூறியும். தனக்கு வேண்டப்படாதவர்களை தூர இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்போவதாவும் மிரட்டி வந்துள்ளார். இது தொடர்பாக கிழக்கு மாகாணசபை பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரான கருணாகரன் என்பவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தும் உள்ளார்.
அதுமட்டுமல்லாது இடமாற்றம் தொடர்பாக அமைச்சுக்கு விண்ணப்பித்தவர்களில் 15 பேரிடம் தொலைபேசி மூலமாக உரையாடி தலா 50ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுமுள்ளார். ஆனால் இதுவரை அவர்களுக்கு எந்தவொரு இடமாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் ஏனையவர்களுடைய விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படாத நிலையில் அலுவலகத்தில் தேங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
எந்தவொரு இடமாற்றமும் கிழக்கு மாகாணசபைக்குள் நிழ்வதாயின் தனக்கூடாகவே நடைபெறவேண்டும் என்றும் இல்லாவிடில் உரிய அதிகாரிகள் மீது நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்து தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாக்குவேன் என்று இவர் நேரடியாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிய வருகின்றது.
தற்பொழுது தேர்தல் காலமாகையால் கிழக்கு மாகாணசபைக்குள் இந்த விடையம் பெரும் குழப்பத்தை ஏற்டுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment