Monday, February 07, 2011

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரச அதிகாரிகளும் அரசாங்க அரசியல்வாதிகளும் புறக்கணிப்பு மட்டக்களப்பு

மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களின் ஊரான கிரான் சின்னவெம்பு நூறு வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 160 குடும்பங்கள் வெள்ளத்தால் மிகவும் பெரிதாக பாதிக்கப்பட்ட நிலையில் கருணா அம்மானுக்கு எதிரானவர்கள் என்ற ரீதியில் அப்பகுதி கிராம சேவையாளர் கிரான் பிரதேச செயலாளர் அரசாங்க அதிபர் ஆகியோர் எதுவித நிவாரண உதவிகளோ பாதிப்பு
பதிவுகளோ இதுவரை மேற்கொள்ளவில்லை.

உணவுக்காக மிகவும் கஷ்ரப்பட்ட நிலைமையில் அகதிமுகாமில் தங்கள் கிராமத்தில் தஞ்சமடைந்த இம்மக்கள் பராமரிப்பு அற்ற நிலைமையில் பட்டிணியை எதிர்நோக்கி இருந்தனர். இம்மக்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படாமைக்கு காரணம் அரசாங்க அதிகாரிகள் பதவி உயர்வுக்காக கருணா அம்மானை காக்கா பிடிக்கும் நோக்குடன் செயற்பட்டு வருவதாகும் என மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர். கருணாவுக்கு துதிபாடும் இவ்அரச அதிகாரிகளின் நடவடிக்கை கிரான் மக்களை மிகவும் வேதனைப்படுத்தி உள்ளது.

இம்மக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வை.யோகேஸ்வரனுக்கு தங்களது துன்ப நிலையை தெரிவித்த போது இரவுவேளை என்றும் பாராது உடனடியாக அவ்விடத்திற்கு வந்து அம்மக்களுக்கான உணவு உதவியை வழங்கியதோடு உதவிகளை தொடர்ந்து வழங்குவதாகவும் அரச உதவியை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இம்மக்கள் இன்றுவரை இரண்டு அகதி முகாம்களில் வசித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கான உதவிகள் தற்போதும் பாராளுமன்ற உறுப்பினர் வை.யோகேஸ்வரன் அவர்களாலே வழங்கப்பட்டு வருகின்றது என மக்கள் தெரிப்பதுடன் இவ்வேளை பாராளுமன்ற உறுப்பினர் வை.யோகேஸ்வரன் இக்கிரான் சின்னவெம்பு முகாமில் வைத்து அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் கிராம சேவையாளர் ஹிஸ்புல்லா அமைச்சர் ஆகியோருடன் தொலைபேசியில் இம்மக்களின் நிலை குறித்து கதைத்ததாகவும் அவர்கள் நாளை வருவார்கள் எனவும் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை இவர்கள் யாரும் வரவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். காரணம் இம்மக்கள் கருணா அம்மானுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்தமையே காரணமாகும். இவ்வேளை கருணா அம்மானின் கையாளாக அரசாங்க அதிபர் பிரதேச செயலளார் கிராமசேவகர் உள்ளதால் கருணாவுக்கு எதிரானவர்கள் என்றால் எவ்வளவு தூரம் பாதித்தாலும் எந்த உதவியும் வழங்க மாட்டார்கள் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வை.யோகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் அவ்விடத்தில் வந்து உதவாவிட்டால் சாப்பாடு இல்லாமல் குழந்தைகள் பட்டினி சாவுவரை செல்ல வேண்டி ஏற்பட்டிருக்கும்.

இவ்வேளை கிராம சேவகர் கருணாவுடன் இயங்கும் இராம அபிவிருத்திச்சங்க தலைவர் ஆகியோர் கருணாவின் தூண்டுதலுடன் பொலிஸ் பகுதியை பயன்படுத்தி துன்புறுத்தவதாக இம்மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் என மக்கள் கூறுகின்றனர். பாவம் மட்டக்களப்பு மக்கள்

No comments:

Post a Comment