
இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கையின் சில சரத்துக்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதில் இந்தியா தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது .
இந்த உடன்படிக்கையின் தம்முடன்; இணங்கிக்கொண்ட விடயங்களை இலங்கை உதாசீனம் செய்துள்ளதாகவே கருதுவதாக இந்தியா தெரிவித்துள்ளதாக லக்பிம செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கவேண்டுமானால், அதிகாரப் பரவலாக்கம், மாகாணசபை சபை சட்டம் உள்ளிட்ட குறித்த உடன்படிக்கையின் சில சரத்துக்களை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது தாம் வழங்கிய ஒத்துழைப்பு குறித்தும் இந்தியா ஞாபகப்படு;த்தியுள்ளதாக லக்பிம குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் இந்தியா, இ;ந்த விடயத்தில் தற்போது முனைப்பை காட்டுவது தமிழக சட்டசபை தேர்தலை மையப்படுத்திய நகர்வு மாத்திரமே என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்
No comments:
Post a Comment