Saturday, February 05, 2011

இலங்கைத் தூதரகம் முன் கனேடிய தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

 

இலங்கையின் 63 ஆவது சுதந்திர தினமான நேற்று கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ் சமூகத்தினரில் ஒரு சாரார் தலைநகர் ரொரன்ரோவில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினர்.

 
 
சுமார் 200 பேர் வரையானோர் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்று இருந்தனர். மதிய நேரம் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கனேடிய தமிழர்கள் தேசிய பேரவையின் மூத்த தலைவர்கள் இப்போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள்.

தமிழர்கள் இலங்கையில் இன்னமும் அடக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள், நசுக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள், இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment