
நுழைவிசைவுக் காலம் [விசா] முடிந்த பின்னரும் சிறிலங்காவில் அனுமதியின்றித் தங்கியிருந்தாகவே இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சாமி எனப்படும் முத்துசாமி இளங்கோவன் என்ற கப்பல் வணிகர் 2008ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சிறிலங்கா காவல்துறையினரால் கொழும்பு கதிரேசன் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இவருக்கு எதிராக மோதற காவல்துறையினர் சிறிலங்காவில் தங்குவதற்கான இசைவினைப் பெறாமல் தங்கியிருந்ததாக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற ஈழத்தமிழரான இவர் பெருமளவு கப்பல்களை இயக்கும் ஒரு வணிகராவார்.
எழுபதிற்கும் அதிகமான நாடுகளில் இவரது கப்பல்கள் சேவையில் ஈடுபடுகின்றன.
சிறிலங்கா கடற்பரப்பிலும் இரண்டு கப்பல்கள் சேவையில் ஈடுபட்டன. அவற்றில் ஒரு கப்பல் கடற்புலிகளால் தடுத்து வைக்கப்பட்டது.
அதன்பின்னர் சிறிலங்கா வந்த இளங்கோவன் அந்தக் கப்பலை விடுவிப்பது தொடர்பாக புலிகளின் உயர்மட்டத்துடன் பேச்சு நடத்தினார்.
யாழ்ப்பாணம் சென்ற இவர் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்ததுடன் அங்கு தங்கியிருந்த போது புலிகளின் உயர்நிலைத் தலைவர்களுடன் நிழற்படங்களையும் எடுத்துள்ளார்.
இவருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சட்டமா அதிபர் கைவிட்டுள்ளார்.
அதேவேளை இவர் மீது சிறிலங்காவில் தங்குவதற்கான இசைவு பெறாமல் தங்கியதான குற்றச்சாட்டு மட்டுமே சட்டமா அதிபரால் சுமத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கொழும்பு நீதிவான் எதிர்வரும் 15ம் திகதிக்கு வழக்கு விசாரணையை பிற்போட்டுள்ளார்.
No comments:
Post a Comment