29 June, 2011 by admin
பிரித்தானியாவில் இயங்கிவரும் சனல் 4 தொலைக்காட்சி சமீபத்தில் ஒளிபரப்பிய இலங்கை கொலைக்களங்கள் நிகழ்ச்சிக்கு எதிராக இதுவரை 118 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் தொலைக்காட்சிகளி எந்தக் காட்சியை ஒளிபரப்பலாம் எதனை ஒளிபரப்பக்கூடாது என்று கட்டுப்படுத்தும் நிறுவனமாக ஓஃப்கொம் உள்ளது. ஒளிபரப்பப்படும் காட்சிகள் இனரீதியாகவோ இல்லை பயங்கரவாதத்துக்கு ஆதரவாக இருக்கிறாதா என்பது போன்ற பல விடையங்களை ஓஃப்கொம் நிறுவனம் அவதானித்து வரும். வரம்பு மீறிச் செயல்படும் தொலைக்காட்சிகளின் லைசன்ஸை இந் நிறுவனத்தால் ரத்துச்செய்யவும் முடியும்.தற்போது சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காட்சிகள் தம்மைப் பாதித்துள்ளதாகவும், பிற காரணங்களைக் காட்டியும் பிரித்தானியாவில் உள்ள சிங்களவர்கள் பலர் ஓஃப்கொம் நிறுவனத்துக்கு முறைப்பாடுகள் செய்துள்ளனர். இதில் 118 முறைப்பாடுகளை இந் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் இந் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் வசிக்கும் சில சிங்களவர்களால் இதனைச் செய்ய முடிகிறது என்றால் லண்டனில் லட்சக்கணக்காக வாழும் தமிழர்களால் ஏன் இதனை எதிர்த்து ஓஃப்கொம்முக்கு கடிதங்களை அனுப்ப முடியாது ?
கொலைக்களங்கள் நிகழ்சி மூலம் நாம் இலங்கையின் நிலையை, அதுவும் உண்மை நிலையை அறிந்துகொண்டோம் ! இந் நிகழ்ச்சி எம்மை பாதிக்கவில்லை மாறாக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழர்கள் இந் நிறுவனத்துக்கு ஏன் எடுத்துச் சொல்லக்கூடாது ?
http://www.ofcom.org.uk/
Head Office
If you want to write to Ofcom, our head office is:
Ofcom
Riverside House
2a Southwark Bridge Road
London
SE1 9HA
No comments:
Post a Comment