யாழ்குடாவிலும் வன்னிப் பெருநிலப்பரப்பிலும் சிங்கள இராணுவத்தினதும் ஒட்டுக் குழுக்களினதும் உதவியுடன் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவது பற்றி பல தடைவைகள் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். ஆயினும் பொதுமக்களின் காணிகளில் தொடர்ந்து சிறீலங்காப் படையினரின் துணையுடன் மண் அகழ்வு இடம்பெற்றுவரும் கொடுமை இடம்பெற்று வருகின்றது.யாழ்குடாவில் உள்ள அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய அடுத்தடுத்த கிராமங்கள் இரண்டுமே இந்த சட்ட விரோத மண் அகழ்வால் பெரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மண்கும்பானில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்
வினால் காலப்போக்கில் இந்தக் கிராமமே அழிந்து போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் கடல் நீரும் இந்தக் கிராமத்தினுள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தப்பிரதேசமக்கள்அச்சம்தெரிவித்தனர்.
வினால் காலப்போக்கில் இந்தக் கிராமமே அழிந்து போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் கடல் நீரும் இந்தக் கிராமத்தினுள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தப்பிரதேசமக்கள்அச்சம்தெரிவித்தனர்.
மண்கும்பான் பிரதேசம் ஒரு மைல் அகலம் கொண்ட ஒரு சிறு கிராமம். இங்கு மணல் அகழ்வுக்குப் பிரதேச செயலாளர் அனுமதி வழங்கி உள்ளார். 1962ம் ஆண்டில் கடற்கரையிலிருந்து ஒரு மைல் தூரத்துக்கு அப்பால் மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவை மீறப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் 15 பாரவண்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டால், படையினருக்கும் அரச அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்துவிட்டு கள்ளத்தனமாக 30 பாரவண்டிகளில் ஏற்றிச் செல்கின்றனர். இதனைத் தடுக்குமாறு தாம் முறைப்பாடு செய்தும் கடற்படையினரோ, காவல்துறையினரோ, பிரதேச சபைச் செயலாளரோ இதற்கு நடவடிக்கை எடுப்பதாக இல்லை என்று மக்கள் மேலும் கவலை தெரிவித்துள்ளனர்.
இரவு நேரங்களில் இந்த அநியாயம் இடம் பெறுவதால் இதனைத் தடுக்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். இதனைத் தட்டிக்கேட்க முனைபவர்கள் இராணுவத்தினராலும் அவர்களுடன் இயங்கும் ஒட்டுக் குழுவினராலும் கடுமையாக எச்சரிக்கப்படுகின்றனர். இதனை சிறீலங்கா காவல்துறையினரும் கடற்படை அதிகாரிகளும் கண்டும்காணாததுபோல மௌனம் சாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் யாழ்.குடாவின் தீவுப் பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு சிங்களப் படையினரே காரணம் எனத் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்குத் தேவையான குடிதண்ணீர் பெற்றுக்கொள்ளும் பெரும் எண்ணிக்கையான கிணறுகள் உயர்பாதுகாப்பு வலயம் மற்றும் படையினரின் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் அவலத்திற்குள் உள்ளாகியுள்ளனர்.
இதனால் பொறுமையை இழந்த வேலணை, நயினாதீவு, மண்டைதீவு, புங்குடுதீவு ஆகிய கிராமங்களில் இருந்து திரண்டு வந்த மக்கள் அன்றாடத் தேவைக்கான குடிதண்ணீர் தேவைபற்றி ஒரே குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எமது மக்கள் குடிதண்ணீருக்கே திண்டாடும் போது படைத்தரப்பினர் தண்ணீரின் அருமை தெரி
யாமல் எங்களுடைய குடிதண்ணீர் கிணற்றை அடைத்து மறித்து குளிக்கின்றனர், தண்ணீரைத்துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தினர்.
மண்டைதீவு பெண்மணி ஒருவர், எங்கள் மண்டைதீவுக் கிராமத்தில் இரண்டு குடிதண்ணீர் கிண
றுகள் இருக்கின்றன. நாங்கள் பெரும்பாடுபட்டு அவற்றைப் பாதுகாத்து வருகின்றோம்.
கறையான் புற்றெடுக்க கடுவன் குடிகொண்டது போல் படையினர் ஒரு கிணற்றைப் பலவந்தமாகக் குளிப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர் என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தார். பணத்தைக் கொடுத்துக்கூட குடிநீர் பெறமுடியாதுள்ளதாக மக்கள் கவலைதெரிவித்துள்ளனர். எங்களுடைய கிராமங்களுக்குப் பிரதேச சபை, சர்வோதயம், கூட்டுறவு சங்கம் மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் பௌசர்கள் மூலம் குடிதண்ணீர்விநியோகிக்கின்றன. அதற்கான பணத்தையும் கொடுக்கிறோம். ஆனால் முறையான விநியோகம் இல்லை. பற்றாக்குறைதான் காணப்படுகின்றது என்றும் அப்பகுதி மக்கள் குறைபட்டுள்ளனர்.
“நமது மண்ணை நாம்தான் பாதுகாக்க வேண்டும். இதற்கு நாமே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான தீர்வும் நம் கைகளில்தான் இருக்கிறது. சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்க நம் மக்கள் மத்தியில் இதற்கான விழிப்புக் குழுக்களை நாமே அமைக்க வேண்டும்” என்று ஓர் ஆலோசனையை இந்த பாதிக்கப்பட்ட மக்களின் முன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் முன்வைத்தார். இவருடைய ஆலோசனையை மண்டபத்தில் இருந்த அனைவருமே ஏகமனதாக வரவேற்றனர்.இந்த எதிர்பாராத விழிப்புணர்வு ஆலோசனையும் மக்களின் ஏகோபித்த ஆதரவும் ஈ.பி.டி.பி. ஒட்டுக்குழு அமைச்சர் ஒருவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. “அப்படியானால் உங்களுக்கு எல்லாம் மண் தேவையே இல்லையா? மண் எடுப்பதை முற்றாகத் தடை செய்ய வேண்டுமா?” என்று மக்களைப் பார்த்துக் கேட்டார்.
“ஐயா! நாங்கள் மண் வேண்டாம் என்று கூறவில்லை. எங்கள் தேவைக்குக் காசு கொடுத்து வாங்குகிறோம். மண் அகழ்வு என்ற பெயரில் மண்கும்பான் அழிக்கப்படக் கூடாது.
சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதைத் தடுக்க வேண்டும்`` என்றுதான் கேட்கின்றோம் என்று கூறினர் மக்கள். இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது என்று நிலை ஏற்பட்டதால், போல் என்ற நபரின் பெயரைக் கூறி அழைத்து உடனடியாகப் பிரதேச மக்களைக் கூட்டி விழிப்புக்குழு ஒன்றை அமைத்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யும்படி ஒட்டுக்குழு அமைச்சர் கேட்டுக் கொண்டார். அப்போது அங்குள்ள சிலர் பாலுக்குப் பூனையைக் காவல் வைப்பது போல்தான் என்று முணுமுணுத்துள்ளனர்.இந்நிலையில், மண்டைதீவில் இருந்து வந்த மக்களின் கோரிக்கை சற்று ஆழமாகவே நோக்கப்பட வேண்டியவை. இந்தப் பிரதேச மக்கள் யுத்தத்தின் பின் மீள்குடிய மர்த்தப்பட்டவர்கள். மீளக்குடியமர்வு என்பது வெறும் கண்துடைப்பு. ‘இடம்பெயர்ந்த எங்களை மீண்டும் எங்களுடைய இடத்தில் கொண்டு வந்து விட்டுள்ளனர். எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. எங்களுடைய சொந்த இடத்தில் இன்றும் அகதிகளாகவே குடிசைகளிலும் தறப் பாள்களிலும் இருக்கின்றோம்.
ஆனால் படையினர் எங்கள் வீடுகளை ஆக்கிரமித்துக் கொண்டு உல்லாசமாக இருக்கின்றனர். உடனடியாக எங்கள் வீடுகளை மீட்டுத் தாருங்கள். உங்களிடமும் எத்தனையோ தடவை கூறிவிட்டேம். இன்று இரண்டில் ஒரு முடிவு வேண்டும்`` என்று குறிப்பிட்டார் ஒரு பெண்மணி. இதைக்கேட்ட ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ், ‘அம்மா கொஞ்சம் பொறுமையா இருங்கள். படையினர் இப்பொழுது வேறு இடங்களில் கட்டடங்களைக் கட்டிக் கொண்டு இருக்கின்றனர். அவை கட்டி முடிந்ததும் உங்கள் வீடுகளில் இருந்து எழும்பி விடுவார்கள்`` என்றார்.
‘என்ன ஐயா! வேறு இடங்களில் கட்டடம் கட்டுகின்றார்கள் என்கிறீர்கள். எங்களுடைய சொந்தக் காணிகளில் தானே கட்டடம் கட்டுகின்றனர். எப்படி வெளியேறுவார்கள். இது நடக்குமா?`` என்று அந்த ஒட்டுக்குழு அமைச்சரிடமே திருப்பிக் கேட்டார் அந்தப் பெண்மணி. மற்றும் ஒரு பெரியவர் ‘எனக்கும் எனது சகோதரர்களுக்கு மூன்று காணிகள் இருக்கின்றன. ஒரு துண்டு காணியில் கட்டடம் கட்டி இருக்கின்றனர்.
மற்ற இரண்டு காணிகளிலும் விளையாட்டு மைதானம் அமைத்து விளையாடுகின்றனர். இந்தக் கொடுமையை எங்கே சொல்வது`` என்று கேட்டார்.டக்ளசிடமிருந்து நேரடி பதில் இல்லை என்றாலும் ‘எவ்வளவோ துன்பங்களை அனுபவித்து விட்டோம். எதையும் தாங்கும் இதயத்துடன் இன்னும் சிறிது காலம் பொறுத்துக் கொள்வோம். கூடிய விரைவில் சொந்தப் பூமியில் சொந்த வீடுகளில் வாழும் நிலையை ஏற்படுத்துவோம்`` என்று கூறினார்.இதனைக்கேட்ட பொதுமக்கள் மிகவும் ஆவேசம் கொண்டவர்களாக கூக்குரல் இட்டனர். இதனால் நிலைமையை சமாளிக்க முடியாமல் இடத்தைவிட்டு ஒட்டுக்குழு அமைச்சர் நழுவிவிட்டாராம்.மக்களின் விழிப்புணர்வுப் போராட்டங்களே எமது தேசத்தை மீட்டுத்தரும் என்பதில் இரண்டு கருத்துக்கிடமில்லை. இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்!
நன்றி - ஈழமுரசு_87
No comments:
Post a Comment