Monday, June 27, 2011

சிறீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் தமிழீழ விடுதலை இயக்கத்துடன் மீள இணைவு

சிறீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் தமிழீழ விடுதலை இயக்கத்துடன் மீள இணைவுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று கே.என்.சிறிகாந்தா மற்றும் எம்.கே
.சிவாஜிலிங்கம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு இன்று முதல் கலைக்கப்பட்டு கட்சி தமிழீழ விடுதலை இயக்கத்துடன் மீள இணைகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ அறிக்கையை இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது கே.என்.சிறிகாந்தா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தும் நோக்கில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் புலம்பெயர் உறுப்பினர்களின் அழைப்பின் பேரில் தாம் தமது கூட்டமைப்பை கலைத்து விட்டு மீளவும் தமிழீழ விடுதலை இயக்கத்துடன் இணைவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் கே.என்.சிறிகாந்தா மற்றும் அவ் அமைப்பின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலை இயக்கத்துடன் இணைவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளையும்ம் குறிக்கோள்களையும் ஏற்று உறுதியுடன் செயற்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்காக எமக்குத் துரோகம் செய்த சக்திகளை கண்டுகொள்ளாமல் விடுவதோ அல்லது அவர்களின் துரோகங்களுக்கு வெள்ளை பூசுவதாயோ எங்கள் நடவடிக்கை இருக்காது.
எமது நிலைப்பாடு தொடர்ந்தும் ஒன்றாகவேயிருக்கும். நாளை வவுனியாவில் நடைபெறவுள்ள ரெலோ அமைப்பின் தேசிய மாநாட்டில் நாம் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment