இலங்கை போக்குவரத்து சபையில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
தனியார் துறைக்கு போட்டியாக போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதேவேளை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பிலும் ஜனாதிபதி குறித்த பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான குமார வெல்கம, சீ.பி. ரத்னாயக்க, பிரதி அமைச்சர் ரோஹன குமார திஸாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சம்பிக்க பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment