Saturday, June 25, 2011

போர்க் குற்ற வீடியோவை பொய் என நிரூபிப்பாராம்!

இலங்கையில் அரச படையினரால் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று குற்றஞ்சாட்டி பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டு இருக்கும் இலங்கையின் கொலைக்களம் என்கிற ஆவணத் திரைப்படம் போலியானது என்று நிரூபிப்பார் என ஐ.நாவுக்கான பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர டீ சில்வா சூளுரைத்து உள்ளார்.

ஐ. நாவின் பாதுகாப்புச் சபை இதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டு உள்ளார்.

இந்த ஆவண வீடியோ சர்வதேச அரங்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment