Saturday, July 30, 2011

சனல் 4 காணொளிக்கு எதிராக இன்று ஆஸியில் ஆர்ப்பாட்டம்!

சனல் 4 காணொளியை அவுஸ்திரேலியாவில் ஒளிபரப்பியமைக்கு எதிராக அங்குள்ள இலங்கையர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் அவுஸ்திரேலிய ஏபிசி தொலைக்காட்சியில் தொடர்ந்து மூன்று நாட்கள் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது.


அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகரம் இதனை ஒளிபரப்பப்படக் கூடாது என்று விடுத்த வேண்டுகோளை மறுத்து ஏபிசி தொலைக்காட்சி ஒளிபரப்பியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் ஒளிபரப்பியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று ஆர்ப்பாட்டமொன்றை ஒழுங்கு செய்துள்ளதாக எதிர்ப்பு ஆர்ப்பாட்ட அமைப்பின் உறுப்பினரான ஒசன் அபயவர்தன மெல்பன் நகரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment