Wednesday, July 27, 2011

புலம்பெயர் நாடுகளில் அகதி அந்தஸ்து வழங்கப்படுவதை தடுக்கும் முயற்சியில் இலங்கை!



சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் பாலிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.



நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் முரே மக்குல்லியுடன் ஜீ.எல்.பீரிஸ் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இச்சந்திப்பின்போது சட்டவிரோத குடியேற்றப் பிரச்சினை, பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நோக்கிச் சென்றதாகக் கூறப்பட்ட இலங்கை அகதிகளைக் கொண்ட கப்பல் இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டது. இது இதற்கு முன்னர் கனடா நோக்கி சட்டவிரோதமாக குடியேற்றவாசிகள் சென்ற “ஓசியன் லேடி” மற்றும் “சன் சீ” கப்பல்களின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வளர்ச்சிக்கான தாக்கங்கள் குறித்து ஜீ.எல்.பீரிஸ் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்டுடன் பாலியில் இடம்பெற்ற பிராந்திய நாடுகளின் மாநாட்டில் கலந்துரையாடியுள்ளார்.

சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் கெவின் ரூட்டுடனும் ஜீ.எல்.பீரிஸ் பேச்சு நடத்தியுள்ளார்.

அவுஸ்திரேலிய கடற்பரப்பை நோக்கிச் சென்ற ஓசியன் வைகிங் கப்பல் தொடர்புடைய விடயங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் கையாண்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பகிறது.

கப்பலில் புகலிடம் கோரும் புகலிடம் கோரிக்கையாளர்கள் சட்டபூர்வமான உரிமை கோரவில்லை இவர்கள் வெறுமனே பொருளாதார அகதிகள் என்று மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் அண்மைய ஆய்வுகளை சுட்டிக்காட்டி ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.

இந்தோனேஷியாவின் பாலியில் நடைபெற்ற 18ம் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளச்சென்ற போதே, அமைச்சர் பீரிஸ் இந்த சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.

No comments:

Post a Comment