Thursday, July 28, 2011

சன்சீ கப்பலில் சென்றவர்களில் ஒருவரை திருப்பி அனுப்ப கனடா உத்தரவு


canadaகனடாவின் மேற்குக் கரையோரப் பகுதிக்கு கடந்த வருடம் எம்.வி.சன்சீ கப்பலில் வருகைதந்திருந்த தமிழர் ஒருவர் போர்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் திரும்பிச் செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.
அந்தக் குடியேற்றவாசி யார் என்பது வெளிப்படையாக அடையாளம் காட்டப்படவில்லை.


கடந்த ஏப்ரலில் குடிவரவு மற்றும் அகதிகள் சபை முன்னால் அவர் ஆஜராக்கப்பட்டிருந்தார். அவரை இலங்கைக்கு நாடு கடத்தும் தீர்மானம் இந்த வாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. தான் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், அவரை நாடு கடத்தும் தீர்மானத்தில் அவருக்கு எதிரான விசேடமான குற்றச்சாட்டுகள் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், போர்க் குற்றத்தை ஏனையோர் இழைப்பதற்கு அவர் ஆலோசனை கூறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
சன்சீ கப்பலில் வருகைதந்திருந்த சுமார் 500 பேரில் இவரும் ஒருவராவார். இவர்களில் அநேகமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குடியேற்றவாசி உட்பட எட்டுப்பேர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment