பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப்பயணம் மேற்கொண்ட 6 உணர்வாளர்களையும் வரவேற்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணிமுதல் 4 மணிவரை பாரீஸ் invalides பகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஈருருளிப் பயண உணர்வாளர்கள் தமது பயணத்தின் நோக்கம் பற்றியும் தமது அனுபவம் பற்றியும் எல்லோருடனும் பகிர்ந்துகொண்டனர்.
இந்த ஈருருளிப் பயணத்தில் பிரான்சு நாட்டைச்சேர்ந்த நண்பர் ஒருவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அவர் பிரெஞ்சுமக்களுக்கு தமது பயணத்தின் நோக்கம் பற்றி விளக்கமளித்ததுடன், துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினார்.
இவர்களுடன் 16 வயதுடைய மாணவனான சுந்தரசர்மா ராமச்சந்திரன் என்ற சிறுவனும் ஈருருளிப் பயணத்தில் சளைக்காமல் கலந்துகொண்டமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதுடன் பலரும் அவரைப்பாராட்டினர்.

No comments:
Post a Comment