இதுவரை காலமும் தமிழ்மக்கள் என்ன சொல்லிவந்துள்ளார்களோ அவற்றை உண்மை என்பதை அண்மைய விசாரணைக்குழுவின் அறிக்கை உறுதிப்படுத்துகின்றது என ஜெயா தொலைகாட்சியில் நடைபெற்ற கேள்விகணைகள் கலந்துரையாடல் நிகழ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கலந்துரையாடலில் பகிர்ந்துகொள்ளப்பட்டவிடயங்கள் வருமாறு -
வன்னியில் பெருமளவில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டுவந்துள்ளார்கள் என்பதையும் மருத்துவமனை உட்பட போர்ச்சூனிய பிரதேசத்தில் பொதுமக்கள் மீது குண்டுதாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பொதுமக்கள் மீது பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இவ்வறிக்கை உறுதிப்படுத்துகின்றது.
அத்தோடு போர்நடைபெற்ற இறுதிக்கட்டத்தில் 70000 பொதுமக்களே அங்கு தங்கியிருந்ததாக அரசாங்கம் அறிவித்துவந்தது. ஆனால் 330000 பொதுமக்கள் அங்கு தங்கியிருந்ததை இவ்விசாரணைக்குழு அறிக்கை குறிப்பிடுகின்றது. மருத்துவமனைகள் என சுட்டிக்காட்ட நிலைகள் தெளிவாக தெரிந்த நிலையிலும் மருத்துவமனைகள் தாக்கப்பட்டுள்ளன என்பதை இவ்வறிக்கை கூறுகின்றது.
பொதுமக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் பல்குழல் எறிகணைகள்
பயன்படுத்தக்கூடாது என்ற நடைமுறையை மீறி பொதுமக்கள் வாழும் இடங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளமை பாரிய போர்க்குற்றமாகும்.
எனினும்அங்கு வாழ்ந்த மக்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்வதிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்புக்கொண்டுவந்த பிரேரணையை தோற்கடித்தமையிலும் பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் பாரிய படைக்கலங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதிலும் இந்தியா சிறிலங்கா அரசுடன் இணைந்துநின்றுள்ளது என்பதையும் நாம் கவனத்தில்கொள்ளவேண்டும்.
நடைபெற்றுமுடிந்தது இனப்படுகொலை என்பதையும் தவறான செய்தியை மக்களுக்கு கொண்டுசென்றோம் என்பதையும் தவறான முறையில் நடந்துகொண்டோம் என்பதையும் இந்திய அரசு வெளிப்படையாக அறிவிக்கும்போதே இந்தியா தனது காந்திய நாடு என்ற நிலையை தக்கவைக்கமுடியும். அல்லாவிட்டால் இந்தியா என்பது தமிழினப்படுகொலைக்கு துணைபோன நாடாகவே வரலாற்றில் இடம்பெறும்.
அத்தோடு நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு அப்போர்க்குற்றங்களை மேற்கொண்ட சிறிலங்கா அரசிடமே விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என விசாரணைக்குழு கேட்டுக்கொண்டதும் அங்கு நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதையையும் சுட்டிக்காட்டாமல் இவ்விசாரணைக்குழுவின் அறிக்கை தவறவிட்டுள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
செறபின்கா ருவாண்டா பொஸ்னியா போன்ற இடங்களில் நடைபெற்ற படுகொலைகளை இனப்படுகொலையென குறிப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்கா விடயத்தில் அவ்வாறு சுட்டிக்காட்டவில்லை.
எப்படியிருந்தபோதிலும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக அமைப்பு ஒன்றின் விசாரணைக்குழுவானது இந்தளவுக்கேனும் குறிப்பிடத்தக்க விடயங்களை வெளியே கொண்டுவந்துள்ளது என்றவகையில் இதனை முன்னிலைப்படுத்தி தமிழ்மக்களின் தீர்வுக்கான வழிகளை நோக்கி நாம் முன்னேறவேண்டும்.
- போன்ற கருத்துக்கள் இக்கலந்துரையாடலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment