Wednesday, July 27, 2011

அனைத்துலக அழுத்தம்: அவசரகால சட்டம் நீக்கப்படுகிறது? அமைச்சர்கள் அவையில் இன்று கலந்துரையாடல்


அவசரகாலச்சட்டத்தை தளர்த்துவது குறித்து அல்லது நாட்டின் தற்போதைய சூழலில் அவசியமல்லாத பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் சில பிரிவுகளை நீக்குவது குறித்து சிறிலங்கா அமைச்சரவையில் இன்று கலந்துரையாடப்படலாம் என்று மூத்த அரசாங்க வட்டாரம் ஒன்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளது.



அவசரகாலச்சட்டத்தை நீக்குவதற்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டால், அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை நீக்கும் பிரேரணையை சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பிக்காது என்றும் அந்த வட்டாரம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை அவசரகாலச்சட்டத்தின் சில குறிப்பிட்ட பிரிவுகளை நீக்குவதற்கு அமைச்சரவை முடிவு செய்தால், அவற்றை நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றைக் கொண்டு வரும் என்றும் கூறப்படுகிறது.

அவசரகாலச்சட்டத்தை நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்தால், எஞ்சியுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.

அவசரகாலச்சட்டத்தின் கீழேயே சிறிலங்கா அரசாங்கம் 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை டிசம்பர் 31ம் நாள் வரை பிற்போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூரிலும் அனைத்துலக ரீதியிலும் அவசரகாலச்சட்டத்தை நீக்குமர்று கொடுக்கப்பட்ட அழுத்தங்களின் காரணமாகவே அவசரகாலச்சட்டத்தை முழுமையாகவோ பகுதியாகவோ நீக்குவது பற்றி முடிவு எடுக்கப்படவுள்ளதா என்று எழுப்பிய கேள்விக்கு அந்த அரசாங்க வட்டாரம் விரிவாகப் பதிலளிக்க மறுத்து விட்டது.

எனினும், அவசரகாலச்சட்டத்தை நீக்குவதற்கு அனைத்துலக அழுத்தங்கள் இருப்பதை அந்த வட்டாரம் ஒப்புக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் அவசரகாலச்சட்டத்தை நீக்க வேண்ம் என்று சிறிலங்கா அரசாங்கத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

அதேவேளை அவசரகாலச்சட்டத்தை நீக்கினால், சிறிலங்கா அரசாங்கம் கொழும்பு, அனுராதபுர, பதுளை, தெகிவளை-கல்கிசை, காலி, கம்பகா, கல்முனை, கண்டி, குருணாகல, மாத்தறை, மொறட்டுவ, நீர்கொழும்பு, நுவரெலிய, இரத்தினபுரி, சிறி ஜெயவர்த்தனபுர கோட்டே மாநகரசபைகளுக்கும், அம்பாந்தோட்டை, கொலன்னாவ நகரசபைகளுக்கும், வேறு ஐந்து பிரதேசசபைகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment