இன்று லண்டன் லோட்ஸ் மைதானத்தில் பிரித்தானியா மற்றும் இலங்கை அணி மோதுகின்றன. இந்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இலங்கையை ஒதுக்கவேண்டும் என்றும்,


இன அழிப்பில் ஈடுபட்ட இலங்கையோடு உலக நாடுகள் கிரிகெட் விளையாடக்கூடாது என்றும் தமிழ் இளையோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந் நிலையில் இன்று லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இலங்கை பிரித்தானிய கிரிகெட் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பித்தவேளை, நூற்றுக்கணக்கான தமிழ் இளையோர்கள் அங்கே திரண்டு தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சற்று நேரத்துக்கு முன் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தமிழ் இளையோர்களோடு பல பொதுமக்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர் என அறியப்படுகிறது.

போராட்டங்கள் ஆரம்பித்தவேளை இலங்கையை புறக்கணிக்கச் சொல்லிய பதாதைகளுடன் தேசிய கொடியும் இணைக்கப்பட்ட பலூன் ஒன்று பறக்கவிடப்பட்டது. இதனை உள்ளூர் தொலைக்காட்சிகளும், மற்றும் ஊடகங்களும் படம்பிடித்துள்ளன. கடைசியாக இளையோர் நடத்திய போராட்டத்தின்போது சில சிங்கள காடையர் தமிழ் இளையோர்கள் மீது எச்சிலைத் துப்பி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் குறைந்த அளவு தமிழர்களே கலந்துகொண்டிருந்தனர். ஆனால் இன்று பெருமளவான தமிழர்கள் கலந்துகொண்டதால், சிங்களவர்களால் எந்த இடையூறும் வராது என தமிழ் இளையோர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய கொடிகளுடன் லோட்ஸ் மைதானத்தில் சளைக்காது போராடும் தமிழ் இளையோர்களின் கரங்களை, தமிழ் மக்கள் பலப்படுத்தவேண்டும் !