புலிகள் மீதான தடையை நீக்க வேண்டாம் - ஐரோப்பிய ஒன்றியத்திடம் வேண்டுகோள்
விடுதலைப் புலிகள் இயக்கத்தை
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டாம் என்று
ஐரோப்பிய ஒன்றியத்திடம் சிறிலங்கா அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் மீளமைத்து வருகிறது. இந்த
நிலையிலேயே விடுதலைப் புலிகளையும் அந்தப் பட்டியலில் தொடர்ந்தும்
உள்ளடக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரசெல்சில் உள்ள தூதரகத்தின் ஊடாக
சிறிலங்கா அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் 2006ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்திருந்தது.
அதேவேளை,
கடந்த மாதம் 6 நாள் பிரித்தானிய அரசாங்கம் மீளாய்வு செய்து வெளியிட்டுள்ள
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்
இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment