இந்திய
பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் அடுத்த மாதம் தான்
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். யாழ் குடா
நாட்டிற்கு சென்று நிலைமைகளை அவதானிக்க அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்
கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய எதிர்கட்சி தலைவி அடுத்த மாதம் 17
ஆம் 18 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தியாவுக்கு
விஜயம் மேற்கொண்டுள்ள சபாநாயகர் சமல் ராஜபக்ஸவை சந்தித்த பின்னர் நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் இந்திய எதிர்கட்சித் தலைவி இதனை குறிப்பிட்டதாக
ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை சபாநாயகர் சமல் ராஜபக்ஸ உள்ளிட்ட
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்தியாவுக்கு விஜயம்
மேற்கொண்ட போது இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றினால்
மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்திய சபாநாயகர் மீரா குமார்
மன்னிப்பு கோரியுள்ளார்.
இலங்கைவாழ் தமிழ் பிரச்சினைகள் தொடர்பில்
கௌரவமான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க இந்தியாவும் இலங்கையும் பூரண
ஒத்துழைப்புடன் செயற்படும் என தான் நம்புவதாகவும் இந்திய சபாநாயகர்
சுட்டிக்காட்டியதாக ஹிந்து பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment