மட்டக்களப்பு
மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, வாழைச்சேனை, ஆரையம்பதி, ஏறாவூர் உள்ளிட்ட
பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் படையினர் சோதனை
நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீடு வீடாக சென்று சோதனை நடவடிக்கைகளைர மேற்கொண்ட படையினர், குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர். இந்தச் சோதனை நடவடிக்கைகள் காரணமாக மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களில் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தின் பல இடங்களில் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் சோதனை செய்யப்படுவதுடன் அவர்கள் பற்றிய விடயங்கள் இராணுவத்தினாரால் பதியப்படுகின்றது.
இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போது பிரதி பொலிஸ் மா அதிபர்ரூமற்றும் இராணுவ அதிகரிகளுடன் தொடர்பு கொண்டு மக்களிடம் காணப்பட்ட அச்ச நிலை குறித்து விளக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தின் பல இடங்களில் இராணுவத்தினரின் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை நகரின் சில இடங்கில் பொலிஸாரின் உதவியுடன் இராணுவத்தினர் வீடுகளுக்கு சென்று குடும்ப உறுப்பினர்களின் பெயர் விபரங்களைப் பதிவு செய்யகின்றனர்.
கடந்த காலங்களில் மர்ம மனிதன் என்ற பீதியில் மக்கள் உறைந்துள்ள நிலையில் இத்தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment