Wednesday, August 17, 2011

நச்சு எரி குண்டு வீசி கொல்ல பட்ட மக்கள் எரிந்த புதிய அதிர்ச்சி படங்கள் .!

முள்ளி வாய்க்கள் புதுமாத்தளன் பகுதியில் சிங்கள இனவாத அபடைகளிநாள்  அடைக்கலம்  தேடி 
பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்த மக்கள் மீது உலகில் தடை செய்ய பட்ட பொஸ்பரஸ் எரி
குண்டுகளை வீசி படுபாதகமாக இவ் இரக்கமின்றி சிங்கள ஆளும் மகிந்தா அரசு கொன்று குவித்துள்ளது .
 
இவ்வாறு அடையாளம் தெரியாத படி எரிந்து கருகிய நிலையில் உள்ள மக்கள் உடலங்களை 
அந்த களத்தில் நின்ற போராளிகள் மக்கள் வாயிலாக கிடைக்க பெற்றுள்ளது .
 
இறந்த பின்னும்  இவர்கள் யார் என தெரியாதபடி  சிங்களம் திட்ட மிட்டு தமிழர்களை கொன்றழித்து  போர்குற்ற மனித உரிமை மீறல்களை
மக்களே நாங்கள் உலகமுன்  காட்டுவதே எமக்கான பணி.
 
தலைகள் துண்டிக்க பட்டு சிறார்கள் கொல்ல பட்ட அதிர்ச்சி படங்களும் கிடைக்க பெற்றுள்ளன .
தொடராக அவை இங்கே பிரசுரிக்க படும் .
 
முள்ளி வாய்க்காலில்  எம்மினம் அழிந்த பின்னாலாவது அணைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து
எமது விடுதலைக்காக போராடும் நேரமிது .
 
எமது மாவீரர் கனவுகளை நனவாக்க  நான் நாம் தமிழராய் ஒன்றிணைத்து போராடுவோம் .
 
அதுவே அந்த மக்களிற்கும் மண்ணுக்கும் மாவீரர்களிற்கும் நாம் செய்யும் இறுதி கடனாகும் .
 
மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் வரலாற்று கடமை இது .
 
வீழ்ந்தோம் என நினைந்து வீழ்ந்து கதறுவதை விட்டு மீண்டும் நிமிர்ந்தோம் என உலகம் சொல்லட்டும் எழு தமிழா நீ எழுச்சி கொள் ..!

No comments:

Post a Comment