ஐக்கிய நாடுகள் சபையில் சொற்பொளிவாற்ற வரும் மகிந்தா இராஜபக்சேயின்
நியூயோக் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான
எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசால் ஓர் ஆர்ப்பாட்டப்
பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வட அமெரிக்காவிலுள்ள அத்தனை உறவுகளையும், அமைப்புக்களையும், சங்கங்களையும், விளையாட்டுக் கழகங்களையும், மற்றும் பொது அமைப்புக்களையும் எம்முடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
காலம் : வெள்ளிக்கிழமை, செப்ரெம்பர் 23 ம் திகதி, 2011
நேரம் : காலை 9:00 மணி தொடக்கம் மாலை 5:00 மணிவரை
இடம் : ஐக்கிய நாடுகள் சபை முன்பாக, நியூயோக்
போர்குற்றம்
செய்தவர்களை, மனிதாபிமானத்தை மதிக்காதவர்களை, இன அழிப்பைச் செய்தவர்களைத்
தண்டிக்கும் காலம் இது. நீதி வேண்டும் உலகம் நீதி பெற்றுத்தர,
குற்ற்வாளிகளைக் கூண்டிலேற்ற எம்மவர் குரல் தணியாது ஒலிக்கவேண்டும்.
எமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாம் தவறவிடாது பயன்படுத்த
வேண்டும். இவையெல்லாம் நிறைவேற நாம் ஒவ்வொருவரும் எமது பங்களிப்பைத்
தவறாமலும், தப்பாமலும், தாமதியாமலும், தயங்காதும் தரவேண்டும். எமது தலையாய
கடமையாக் எண்ணி எமக்கு ஆதரவைத் தந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை
வெற்றிகரமாக நிறைவுசெய்ய வருமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.
சர்வதேசம் உன்னிப்பாக பார்க்கும் இந்நிகழ்வு எமது உணர்வை எடுத்துக்
காட்டும் விதத்தில் அமையவேண்டும். இந்தப் பேரணியின் வெற்றி உங்கள்
ஒவ்வொருவருடைய கையிலும்தான் தங்கியிருகிறது என்பதை மற்ந்துவிடாதீர்கள். வாகன வசதி செய்தவுடன் அதன் விபரத்தை உங்களுக்கு அறியத் தருவோம்.
தொடர்புகளுக்கு: தொ.இல: 416 829 1362 அல்லது 416 291 7474
கணனி: r.sivalingam@tgte.org
கனடாவில் உள்ள அமைப்புக்களுக்கும், சங்கங்களுக்கும், விளையாட்டுக் கழகங்களுக்கும், மற்றும் பொது அமைப்புக்களுக்குமான ஓர் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3:00 மணிக்கு நடைபெறும். ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் இருவரை வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இடம்:- நல்லூர் கந்தசாமி கோவில் மண்டபம்
20 நகெட் அவென்யூ, ஸ்காபரோ (20 nugget avenue Scarborough - north-east of McGowan and Sheppard)
காலம்: ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் மாதம் 11 ம் நாள், 2011
நேரம்: - பிற்பகல் 3:00 மணி
No comments:
Post a Comment