ஜெனீவா
மாநாட்டில் பல சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்பட உள்ளன என
அறியப்படுகிறது. மனித உரிமை பிரச்சினைகளை மையப்படுத்தி இந்த மாநாட்டின்
போது இலங்கையை சர்வதேச விசாரணைகளில் சிக்க வைக்கும் சூழ்ச்சிகள் கூட
இடம்பெற்று வருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இவை எதுவும்
வெற்றியளிக்காது என அமைச்சர் வாசுதேவ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தொடர்ந்தும் கூறுகையில், எதிர்வரும் 12ஆம்
திகதி ஜெனீவாவில் சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் மா நாடு நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை எடுப்பதற்காக பல சர்வதேச
நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதை நாம் அறிவோம் என்று கூறினார். தற்போதைய அரசாங்கம் யுத்தம் முடிந்ததன் பின்னர் உள்நாட்டில் ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகளை பாதுகாத்தல் என்பவற்றை தேசிய கொள்கைகளாகக் கொண்டே செயற்படுகின்றது. குறிப்பாக நீண்டகாலமாக காணப்பட்ட அவரகாலச் சட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வெளிப்படையான செயற்பாடுகள் உலக மக்களிடையே பெரும் வரவேற்புகளை பெற்றுள்ளது.
குறிப்பிட்ட சில நாடுகள் மாத்திரமே இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன. இவைகள் அரசியல் உள்நோக்கங்களை உடையவை. எனவே, ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் கூடுதலான ஆதரவு இலங்கைக்கு உள்ளது. எனவே, எந்தவொரு சவாலையும் எம்மால் எதிர்கொள்ள முடியும் என்றார் அமைச்சர் வாசுதேவ.
No comments:
Post a Comment