Friday, September 02, 2011

தியாகச்சுடர் செங்கொடிக்கு சுவிஸ்.ஜேர்மனி நாடுகளில் வணக்க நிகழ்வு

மூவர் உயிர்காக்க தன்னுயிரைக் கொடுத்த தியாகச்சுடர். தோழர் செங்கொடிக்கு, சுவிஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் வணக்க நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.நாடுகடந்த தமிழீழ அரசாங்க மக்கள் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில், சுவிசில் சூரிச்சிலும், ஜேர்மனியில் கனோவர் மற்றம் பிறீமன் ஆகிய இடங்களிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

சுவிஸ் :
சூரிச் சிவன் கோவில் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (02-09-2011) மாலை 19:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஜேர்மனி :

கனோவரில் சனிக்கிழமை (03-09-2011) Peine Str, 30519 HANNOVER எனும் இடத்தில் காலை 11:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிறீமனில் ஞாயிற்றுக்கிழமை (04-09-2011) Wir Wollen, Keine, TODESSTRAFE எனும் இடத்தில் மாலை 15:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழினத்தின் விடியலை நெஞ்சினில் சுமந்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது உயிர்காக்க, தற்கொடையாக தன்னுயிரைக் கொடுத்த தோழர்.செங்கொடிக்கு வணக்கம் செலுத்த, அனைவரையும் அழைக்கிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்க மக்கள் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விபரங்களுக்கு :

ஜெயம் (சுவிஸ்) : (00 41) 078 684 74 94
ஜெயச்சந்திரன் (ஜேர்மனி) : (00 49) 01 77 360 66 37
நாதம் ஊடகசேவை

No comments:

Post a Comment