தேசிய
பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த எம்.கே.நாராயணன் மாற்றப்பட்டது குறித்து
அமெரிக்க தூதர் தெரிவித்த பரபரப்பான கருத்து பற்றி `விக்கி லீக்ஸ்'
அம்பலப்படுத்தி உள்ளது.எம்.கே.நாராயணன்
பிரதமர்
அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிந்து வந்த எம்.கே.நாராயணன்,
கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந்தேதி அன்று அந்த பணியில் இருந்து
விடுவிக்கப்பட்டு மேற்கு வங்காள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.
அவருக்குப் பதிலாக வெளியுறவு துறை செயலாளராக பதவி வகித்து ஓய்வு பெற்ற சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்த பதவி மாற்றம் குறித்து இந்தியாவின் அமெரிக்க தூதரான திமோதி ரோமர் அமெரிக்க வெளியுறவு துறைக்கு அனுப்பியுள்ள தகவலை `விக்கி லீக்ஸ்' அம்பலப்படுத்தி உள்ளது.
அமெரிக்காவுக்கு சாதகமானது
அந்த
தகவலில், எம்.கே.நாராயணனின் பதவி மாற்றம், அமெரிக்காவுக்கு சாதகமானது என்று
கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி அனுப்பி
வைக்கப்பட்ட அந்த தகவலின் விவரம் வருமாறு-
"முற்போக்கு பார்வையுள்ள மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தின் தலைமையின் கீழ், காஷ்மீர் கொள்கை உறுதியானதாக மாற்றப்பட்டது. அதே நேரத்தில் எம்.கே.நாராயணன், தேசிய பாதுகாப்பு ஆலோகர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதும் சாதகமான அம்சம்தான்.
ப.சிதம்பரத்துக்கு பிரதான இடம்
ஏனென்றால்,
காஷ்மீர் கொள்கையில் அவருடைய பங்கு பழைமைவாதம் மற்றும் ஆதிக்கமனப்பான்மை
கொண்டதாக இருந்ததுடன், அவ்வப்போது முட்டுக்கட்டையாகவும் அவர் செயல்பட்டு
வந்தார். நாராயணன் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டதும், காஷ்மீர்
பிரச்சினையில் கொள்கை முடிவு எடுப்பதில் பிரதான இடத்திற்கு வந்துள்ளார்''.
இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.
நேரு குடும்பத்துடன் நெருக்கம்
மறைந்த
முன்னாள் பிரதமர்கள் நேரு-இந்திராகாந்தி குடும்பத்தினருடன்
எம்.கே.நாராயணனுக்கு இருந்த நெருக்கம் பற்றியும் அந்த தகவலில்
குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும்
அமெரிக்காவில் பிடிபட்ட லஸ்கர் தீவிரவாதி டேவிட் ஹெட்லியை இந்தியாவுக்கு
அனுப்ப வேண்டும் என்று இந்தியா தரப்பில் வெளிப்படையாக வற்புறுத்தப்பட்ட
போதிலும், அரசுக்கு அதில் உண்மையில் அக்கறை எதுவும் இல்லை என்று,
எம்.கே.நாராயணன் தன்னிடம் தெரிவித்ததாகவும் அமெரிக்க தூதர் தகவல் அனுப்பி
இருக்கிறார்.
காஷ்மீர் தேர்தல்
மற்றொரு
தகவலில், காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை
இந்தியா விரும்பாததால், காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்காவின் செயல்பாடு
மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி
இருக்கிறார்.
காஷ்மீரில்
நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் திரளாக
வாக்களித்ததைத் தொடர்ந்து அங்கு பஞ்சாயத்து தேர்தலையும் நடத்த வேண்டும்
என்பது உள்பட 20 யோசனைகளையும் அவர் மத்திய அரசுக்கு தெரிவித்து
இருக்கிறார்.
தெலுங்கானா விவகாரம்
தெலுங்கானா
விவகாரத்தில் மத்திய அரசு பணிந்தது காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பை
ஏற்படுத்தும் என்று, 2009-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட தகவலில் அமெரிக்க தூதர்
கருத்து தெரிவித்து இருக்கிறார். தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான
அறிவிப்பை மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்ட மறுநாள் அனுப்பி
வைக்கப்பட்ட அந்த தகவலில், இது போன்று மற்ற மாநிலங்களிலும் கோரிக்கை வரலாம்
என்றும், இந்த முடிவு மூலம் காங்கிரசில் பிளவு ஏற்படலாம் என்றும்
குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும்,
பாராளுமன்றத்தில் இரு உறுப்பினர்களும், சட்டசபையில் 6 உறுப்பினர்கள்
மட்டுமே உள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி உறுப்பினர்களுக்கு கிடைத்த
பெரிய வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
பிரகாஷ்கரத் கருத்து
மேற்கு
வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா தொடர்பான விக்கி
லீக்ஸ் தகவல்கள் குறித்து, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர்
பிரகாஷ்கரத் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
"சில்லரை
வர்த்தகத்தில் அன்னிய முதலீடு குறித்து மேற்கு வங்காள மாநிலத்தின்
அப்போதைய முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யாவை சந்தித்து சம்மதம்
பெறும்படி, பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்க தொழில் அதிபர் வால்மார்ட்டிடம்
கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சினை குறித்து பின்னர் புத்ததேவ்
பட்டாச்சார்யா மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் நிலையை விளக்கினார்.
அன்னிய
முதலீட்டை முற்றிலும் நாங்கள் எதிர்க்காவிட்டாலும், சில்லரை வணிகம்
உள்ளிட்ட சில துறைகளில் அன்னிய முதலீட்டில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.''
இவ்வாறு பிரகாஷ்கரத் கூறினார்.
No comments:
Post a Comment