Sunday, September 25, 2011

வரலாறு படைக்கும் வழக்கைத் தொடுத்த வழக்கறிஞர் அதிர்வுக்கு சிறப்புப் பேட்டி !


நேற்று முன் தினம் அமெரிக்காவில் வழக்குப் பதிவுசெய்து அதனூடாக சர்வேந்திர சில்வாவுக்கு பிடியாணை பிறப்பித்துள்ள வழக்கறிஞரான அலி பவுடா அவர்கள் தற்போது லண்டன் வந்துள்ளார். அமெரிக்க பல்கலைக்கழக சட்ட பீட்டத்தின் சட்ட விரிவுரையாளராகவும் ஸ்பிக் கியூமன் ரைட் என்னும் அமைப்பின் உப தலைவராகவும் திரு அலி பவுடா அவர்கள் இருக்கிறார். மூத்த வழக்கறிஞரான இவரை அதிர்வு இணையம் தொடர்புகொண்டு சர்வேந்திர சில்வாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சில கேள்விகளை எழுப்பியது அதற்கு பதிலளித்த அவர் தாமே இந்த வழக்கைத் தொடுத்ததாக தெளிவுபடுத்தியுள்ளார். நாடு கடந்த அரசின் பிரதமர் மதிப்புக்குரிய திரு.ருத்திரகுமார் இந்த வழக்கை வாதாடியதாக வந்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
.



மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கிலேயே திரு ருத்திரகுமாரன் அவர்கள் ஈடுபட்டதாகவும் சர்வேந்திர சில்வாவுக்கு எதிராக தொடுக்கப்பட்டு தற்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வழக்கை தாமே வாதாடியதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சில இணையத்தளங்கள் இச் செய்தியை திரிவுபடுத்தி எழுதியிருந்ததை அனைத்துத் தமிழர்களும் அறிவார்கள். குறிப்பாக தாம் செய்யாத செயல்பாடுகளை வேறு ஒருவர் செய்தாலும் முண்டியடித்து அதனைத் தாமே செய்ததாக சில அமைப்புகள் உரிமைகோரிவரும் கலாச்சாரம் தற்போது படுவேகமாகப் பரவி வருகிறது. இந் நிலையில் இதனைத் தெளிவுபடுத்தும் கடைப்பாடும் உள்ளது.

தற்போது சர்வேந்திர சில்வாவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் பெறப்பட்ட பிடியாணையை அவர் இல்லத்திற்கே கொண்டுபோய் கொடுத்துள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசு அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பாக கொழும்பில் கூடி ஆராய்ந்துள்ளனர். அரசாங்கத்தின் இந் நடவடிக்கை தொடர்பாகவும் செய்திகள் தற்போது கசிந்துள்ளது. கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர் சர்வேந்திர சில்வாவை திருப்பி இலங்கைக்கு அழைக்கலாம் எனக் கூறியுள்ளனர். இருந்தாலும் பெரும்பாலானோர் இல்லை அவர் அமெரிக்காவில் இருந்தவாறே தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை எதிர்கொள்ளட்டும் எனக் கூறியுள்ளனர். இதனால் இலங்கை அரசானது சர்வேந்திர சில்வாவை இலங்கைக்கு திருப்பி அழைக்காமல் வழக்கை எதிர்கொள்ளச் சொல்லியுள்ளதாக தற்போது அறியப்படுகிறது.

எனவே இலங்கை அரசானது தற்போது முதன் முறையாக வெளிநாடு ஒன்றில் இதுபோன்றதொரு வழக்கைச் சந்திக்க நேர்ந்துள்ளது. இவ்வழக்கின் வெற்றி தோல்விக்கு அப்பால் இலங்கை அரசாங்கம் தற்போது பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளது. எனவே உலகத் தமிழர்கள் அனைவரும் இணைந்து தம்மிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் இந்த வழக்கை நடத்தும் திரு.அலி பவுடாவிடம் கையளிக்கவேண்டும். மற்றும் நேரடியாகச் சாட்சிகள் இருந்தால் அதனை அவர்கள் திரு அலி பவுடா அவர்களுக்கு அனுப்பியும் வைக்கலாம். அவரின் கரங்களை உலகத் தமிழர்கள் பலப்படுத்துவது அவசியம். இவ்வழக்கில் அவர் வெல்லும் பட்சத்தில் இதன் தீர்ப்பைக் காட்டி சர்வதேச நீதி மன்றத்திலும் வாதாடலாம். ஏன் எனில் அமெரிக்க நீதி மன்றின் தீர்ப்புக்கு உலகளாவிய செல்வாக்கு இருக்கிறது என்பதனை எவரும் மறுக்க முடியாது.

No comments:

Post a Comment