அமெரிக்காவின் பிரதிநிதியாக
இலங்கை வந்திருந்த அந்நாட்டு பிரதி ராஜாங்கச் ரொபர்ட் ஓ பிளேக்
யாழ்ப்பாணத்துக்குச் சென்ற போது அவருக்கு யாழ். மாவட்டச் செயலகத்தில்
வரவேற்பளிக்கப்படாமைக்கு அரசாங்கத்தின் உயர்மட்ட அழுத்தமே காரணம். இதனையடுத்தே அவர் சாதாரண மனிதன் போல் அங்கு நடத்தப்பட்டார். என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.கே. சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்..
யாழ். மேலதிக அரசாங்க அதிபரைச் சந்தித்த பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடுவதற்காக அவர் அமெரிக்கன் கோணர் என்ற இடத்துக்குச் செல்ல முயன்ற போது அதனைக் குழப்பியடிப்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி அமைப்பினரால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.
அது மட்டுமின்றி, ஓர் இராஜதந்திரிக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய அரச படைகளும் கூட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளன.
இவையனைத்தையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது ரொபர்ட் ஓ பிளக் மீது அரச ஆதரவு பயங்கரவாதமே யாழ்ப்பாணத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது என்றே கூறவேண்டும்.
அமெரிக்க அரசின் பிரதிநிதி ஒருவருக்கே ஈ. பி. டி. பி இவ்வாறானதோர் அச்சுறுத்தலை யாழ்ப்பாணத்தில் விடுத்தது என்றால் சாதாரண மக்களின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதனையும் நாம் இங்கு, இதன் மூலம் தெரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது என்றார்.
தமிழனுக்கு ஏற்படும் அவமரியாதைகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாதவர் அமெரிக்க அரசின் பிரதிநிதிக்கு ஏற்பட்ட அவமரியாதைக்கு வக்காளத்து வாங்குவதன் நோக்கம், அமெரிக்காவில் குடிபெயர வீசாவிற்கு விண்ணப்பிக்கவுள்ளாரோ?
No comments:
Post a Comment