Wednesday, September 07, 2011

கோப்பாயில் இராணுவத்தினரை அடைத்துவைத்த வீரத்தமிழ் பெண்கள்


பெண்களுடன் சேட்டை புரிய முனைந்த இராணுவத்தினரைக் அடைத்துவைத்த சம்பவம் ஒன்று நேற்றிரவு கோப்பாய் மத்தி சூசையப்பர் ஆலயப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றித்தெரியவருவதாவது :

நேற்றிரவு கோப்பாய் மத்தி சூசையப்பர் ஆலயப்பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள இளம் பெண்களிடம் 4 இராணுவத்தினர் சேட்டை விட முயன்றுள்ளனர்.

உடனடியாக அப் பெண்கள் 3 இராணுவத்தினரை தமது வீட்டுனுள் அடைது வைத்துள்ளதுடன் அவர்கள் பயணித்த துவிச்சக்கர வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

மற்றைய இராணுவத்தினரை அனுப்பி உங்கள் இராணுவ பொறுப்பாளரை அழைத்து வரும்படி கூறியுள்ளனர். உடனடியாக அவ்விடத்திற்கு வந்த இராணுவ பொறுப்பாளரை எச்சரிக்கை செய்து விடுதலை செய்தனர்.

No comments:

Post a Comment