Sunday, November 13, 2011

ஈழத் தமிழர்களின் போராட்டம் நியாயம் மிகுந்தது-லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் ரான் ரைடனவர்

Posted Imageஈழத் தமிழர்களின் போராட்டம் நியாயம் மிகுந்தது., அதை ஏகாதிபத்திய அரசுகள் வேண்டுமென்றே வீழ்த்தின என்று குறிப்பிட்ட லத்தீன் அமெரிக்க எழுத்தாளரும் களப்பணியாளருமான தேழர் ரான் ரைடனவர் அதற்கு சோசலீச நாடுகளும் துணை போனது மிகவும் துயரமானது என்று குறிப்பிட்டார். The The Tamil Nation in Srilanka என்ற அவரது நூல் வெளியிட்டில் பேசிய பொழுது தோழர் ரான் ரைடனவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


ஈழத் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தில் போர்க்குற்றவாளியாக உள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்சவுக்கு ஆதரவாக கியூபா எடுத்த நிலைப்பாடு தனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்ததாகவும் தோழர் ரான் ரைடனவர் தெரிவித்தார்;. புலிகள் பயங்கரவாத இயக்கம் கிடையாது என்று குறிப்பிட்ட ரான் ரைடனவர் அவர்கள் கையாண்ட முறைகளில் சில முறைகள் அப்படியிருந்தாலும் புலிகள் விமர்சனங்களுடன் ஆதரிக்கப்பட வேண்டிய முக்கியமான விடுதலை இயக்கம் என்றும் குறிப்பிட்டார்.
தான் ஒரு இடதுசாரியாகவும் சர்வதேசவாதியாகவும் இருந்தாலும் மறுக்கப்படும் உரிமையையும் சுகந்திரத்தையும் ஈழத் தமிழர்கள் கோரிக்கொண்டு தனிநாடு ஒன்றில் வாழ விரும்பும் அவர்களின் அமைதிக்கான போராட்டத்தை அங்கீகரிப்பதாகவும் குறிப்பிட்டார். ஈழத் தமிழர்கள் அமைதிக்காவும் சுகந்திரத்திற்காகவும் சிந்திய இரத்தம் விலை மதிக்க முடியாதது என்றும் அவர்களுக்கு சுகந்திரத்தை பெற்றுக் கொடுக்க இயற்கையான உறவாக இருக்கும் தமிழக தமிழர்கள் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈழத் தமிழர்களின் போராட்டம் நீண்ட காலமாக நடந்;திருக்கிறது. அவர்கள் அமைதி வழியில் முப்பதாண்டு போராடியிருக்கிறார்கள். அவர்கள் விரும்பி ஆயுதங்களை தூக்கவில்லை என்ற தோழர் ரான் ரைடனவர் அதற்கான சூழலை இலங்கை அரசுதான் உருவாக்கியிருக்கிறது என்றும் கறுப்பின மக்களைவிடவும் பாலஸ்தீன மக்களைவிடவும் ஈழத் தமிழர்கள் அதிகம் இழந்திருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈழப்போராளி இயக்கங்கள் தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டதும் தலைவர்களை கொலை செய்து கொண்டதும் முற்காலத்தில் நடந்த பிழையான செயற்பாடுகள் என்று குறிப்பிட்ட ரான் ரைடனவர் ஈழத் தமிழர்கள் தொடர்ச்சியாக அமைதிக்காக போராடிக் கொண்டிருந்தார்கள் என்றும் அவர்களை இலங்கை அரசாங்கம் ஏமாற்றியதுடன் அனைத்து ஏகாதிபத்தியங்களும் அவர்களின் போராடடத்தை ஒடுக்கியிருக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.
ஏகாதிபத்தியம் தனது நடவடிக்கைகளுக்கு ஆதரவான போராட்டங்களை விடுதலைப் போராட்டம் என்றும் தனது போக்கிற்கு உடன்பாடற்ற போராட்டங்களை பயங்கரவாதப் போராட்டம் என்றும் சித்திரித்தது என்று குறிப்பிட்ட ரான் ரைடனவர் கியூபா இலத்தின் அமெரிக்க போன்ற நாடுகள் ஈழப் போராட்டத்தை பற்றி அறிந்திருக்காத காரணத்தினால் ராஜபக்சவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கிலாம் என்றும் குறிப்பிட்டார்.



கறுப்பின மக்களை அமெரிக்கா படுகொலை செய்து இன அழிப்பை மேற்கொண்டதை தனது கண்களால் பார்த்தன் காரணமாகவே பல்வேறு இனங்களிலும் நிறங்களிலும் ஒடுக்கப்படும் மக்களுக்காக தான் போராடத் தொடங்கியதாக தெரிவித்தார். அவ்வகையில்தான் ஒடுக்கப்படும் இனப்படுகொலை செய்யப்படும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஈழத் தமிழர்கள் அமைதியாக வாழவும் சுகந்திரத்தைப் பெறவும் உலகெங்கிலும் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த ரான் ரைடனவர் சோசலிச நாடுகளுக்கு ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் தியாகத்தையும் புரிய வைத்தால் அவர்களிடமிருந்து பெரும் ஆதரவு சக்தி உருவாகும் என்றார். அதற்காக எல்லோரும் உழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தோழர் ரான் ரைடனவர் வட அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சேகுவோரோவின் கொள்கையை பின்பற்றும் இவர் இலத்தின் அமெரிக்க நாடுகளின் விடுதலைப் போராட்டங்களை ஆதரிப்பவர். கியூபப் புரட்சியினால் உந்தப்பட்டு பத்திரிகையயாளராகவும் எழுத்தாளராகவும் களப்பணியாளராகவும் செயற்பட்டவர்.

கியூபா புரட்சி குறித்து நான்கு நூல்களை எழுதியுள்ள தோழர் ரான் ரைடனவர் ஈழ விடுதலைக்கான தனது ஆதரவை தெரிவிக்கும் முகமாக ஈழத் தமிழர்களின் போராட்டம் குறித்து The The Tamil Nation in Srilanka என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலில் ஈழப்போராட்டத்தின் நியாயத்தை எடுத்துச் சொல்லியுள்ளார்.

ஈழத் தமிழர்களை படுகொலை செய்து அவர்களுக்கு அநீதி இழைத்த ராஜபச் போர்க்குற்றவாளியாக குற்றவாளிக் கூண்டிலில் நிறுத்த வேண்டும் என்பது ஏகாதிபத்திய சர்வாதிகார அரசியலுக்கான அடியாக இருப்பதுடன் ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவர்களுக்கு விடுதலை கிடைக்கச் செய்யும் என்றும் தோழர் ரான் ரைடனவர் தெரிவித்தார்.


சென்னையில் தேவநேயப்பாவணார் நூலக அரங்கத்தில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தா. பாண்டியன், இந்தியப் பொதுவுடமைக்கட்சி மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லக்கண்ணு, இந்தியப் பொதுவுடமைக்கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் சி. மகேந்திரன் முதலியோர் நூல்களை வெளியிட்டு வைத்தார்கள்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் பொதுச் செயலாளர் தியாகு, பெரியார் திராவிடக் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்தின், தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாரள்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பா. செயப்பிரகாசம் முதலியோர் நூலைக் குறித்து உரையாற்றினார்கள். நிகழ்வை இலத்தின் அமெரிக்க நட்புறவுக் கழகத்தைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான அமரந்தா ஒருங்கிணைத்தார்.


http://globaltamilnews.net

No comments:

Post a Comment