கடந்த 2010 ஆம் ஆண்டின் 
அறிக்கையில் இலங்கையில் சிறுவர்களைப் பாலியல்  தொழிலுக்காக விற்பனை 
செய்யும் சம்பவங்கள் 5 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக  ஐக்கிய நாடுகளின் 
சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.சுற்றுலாப் பிரதேசங்களில் பாலியல் மற்றும் ஓரினச்சேர்க்கை ஆகியவற்றுக்காக சிறுவர்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக ஐ.நா நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சுற்றுலாத் தொழிற்துறையை அபிவிருத்தி செய்யும் பணிகளை, அரசாங்கம் ஆரம்பித்ததில் இருந்து சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் முறையற்ற சுற்றுலாத் தொழிற்துறையினாலேயே இந்த நிலைமை அதிகரித்துள்ளமைக்கு காரணம் எனவும் சிறுவர் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment